<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/11181209?origin\x3dhttp://the4people.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

Sunday, April 03, 2005

தேர்க்கடை தேவதைகள்

தேர்க்கடைகளைப் பற்றி சனியனில்.

"மச்சான். ஊருல தேர்க்கடை போட்டிருந்தாங்க."

"தேர அதுலயே கமுத்திப்புட்டாங்களா?"

"அடச் சனியம் புடிச்ச பயலே. கொள்ளிக்கட்டய எடுத்து உன் வாய்ல சொருக."

"சரி. விசயத்தச் சொல்லு."

"நம்ம பொம்பளைங்கதான் எங்க போனாலும் கடைக்காரன கடுப்பேத்தி பொறுமையா நின்னு நின்னு யோசிச்சு யோசிச்சு வீணாப் போன பொருள வாங்குவாங்களே. அவ்ளோ நேரம் அவன் கூட சும்மா நிக்கறதுன்னு நானும் அப்பாவும் கூட போகவே மேட்டோம். அன்னிக்கு எங்கப்பாரு தப்பிச்சுக்கிட்டாரு. நான் மாட்டிக்கிட்டேன். ஆத்தா இம்சை பொறுக்க முடியாம ஆத்தா அக்காவோட கடைக்குப் போயிருந்தேன்.

அங்க நெறைய கடையில பொருள வாங்கறது பாதியும் தெரிஞ்சவங்ககிட்ட பேசறது பாத்யுமா பொழுத போக்கிட்டிருந்தேன். அப்பதான் ரெண்டு அக்கா தங்கச்சி சுரிதார்ல வந்தாங்க. சும்மா கும்முனு இருந்தாங்க."

"திரும்ப சொல்லு"

"பிகருன்னா மட்டும் வாயப் பொளந்துக்கிட்டு வந்திருவியே.

அப்ப நாங்க ஒரு ஃபிளவர் வாஷ் கடையில நின்னுக்கிட்டு இருந்தோம். அம்மாவும் அக்காவும் ஒரு ஜாடியில இருந்த பிளாஸ்டிக் பூங்கொத்த இன்னொரு ஜாடிக்கு மாத்தி தரச் சொல்லி கடைக்காரன்கிட்ட கேட்டுக்கிட்டு இருந்தாங்க. நானும் இதுதான் சாக்குன்னு அந்த ரெண்டு பேர்த்தையும் நல்லா சைட் அடிச்சுக்கிட்டு இருந்தேன். அதுங்களும் நம்பள பாத்து மொறைச்சுது. "

"மொறைச்சுதா. லுக் விட்டுச்சா."

"இல்ல. இல்ல. தெளிவா முறைச்சுதுங்க.

தங்கச்சியோ அக்காக்கிட்ட ஏதோ சொல்லுச்சு. அப்புறமா ரெண்டு பேரும் எங்களுக்கு பக்கத்துல வந்தாங்க. இதுதான் சாக்குன்னு நானும் நல்லாவே லுக் விட்டேன். சும்மா ரோஸ் கலர் சுரிதார்ல ரெண்டும் அந்த மஞ்ச லைட்டுல ஜோதிகா சிம்ரனா தெரிஞ்சாங்க."

"ரொம்பத்தான் பில்டப் கொடுக்கற. சீக்கிரம் சொல்லி முடி."

"அப்பத்தான் ஆத்தா திரும்பி அவங்கள பாத்தாங்க. பாத்துட்டு ரொம்ப அன்னியோன்னியமா பேசுனாங்க. அப்பறமாத்தான் தெரிஞ்சது அவங்க எங்க அப்பாவோட ஃபிரண்டு பொண்டாட்டியும் பொண்ணுமாம். எனக்குன்னா என்ன பண்ரதுன்னு தெரியல. ஆத்தா என்னய இண்ட்ரொடூசினப்ப சும்மா வழக்கம்போல ஒரு இளிப்பு இளிச்சு வெச்சேன். இந்த நேரத்துல ஆத்தா வேற என்னைப் பத்தியும் கேம்பஸ்ல வேல வாங்கி இப்ப வேல பாக்கறத பத்தியும் பீட்டர் உட்டுக்கிட்டு இருந்தாங்க. அந்தப் பொண்ணும் சென்னையிலதான் எஞினீயரிங் படிக்கிதாம். அப்பறமா அவங்க என்னய ஒரு லுக் விட்டுட்டு போனாங்க பாரு. ஆகா. எங்கப்பாகிட்ட போட்டுக் கொடுத்தாலும் குடுத்திடுவாங்க போலிருக்கு."

"இதுக்கு ஏண்டா கவலை? ரூட் கிளியராயிடுச்சு. அந்தப் பொண்ண உனக்கு கல்யாணம் பண்ணிக் கொடுத்திடுவாங்க பாரேன்."

"பிரச்சினை அதுவாயிருந்தாத்தான் பரவாயில்லையே."

"அப்புறம்?"

"நான் அவ்ளோ நேரம் சைட் அடிச்சிட்டிருந்தது அந்த ஆன்ட்டிய மட்டுந்தானே."

"அடச் சனியனே...."
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.