<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d11181209\x26blogName\x3d%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://the4people.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://the4people.blogspot.com/\x26vt\x3d4395879655258469858', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

Tuesday, March 22, 2005

வெட்டியான் வெளிநடப்பு

முதலில் வெட்டியானைப் பற்றிய சிறிய அறிமுகத்தை கொடுத்து விடுகிறேன். அவருடைய சொந்த ஊர் தீனியனின் திருச்சி. தீனியனைப் போல இவருக்கு யாரோ வெளிநாட்டு ஷாம்பூவை இலவசமாக டோர் டெலிவரி செய்துவிட்டார்கள் போல. இவரும் ஃப்ரீயாக கிடைத்தால் பெனாயிலையே குடிக்கலாமே என தலையில் தேய்த்துவிட்டிருக்கிறார். அதிலிருந்து கரடுமுரடாய் இருந்த தலையானது வழுக்குப் பாறையாய் மாறியதில் முடிகள் உதிர ஆரம்பித்தன. இவரும் எத்தனையோ விதம்விதமான எண்ணெய்களைப் பயன்படுத்தியும் பிரயோசனம் இல்லாமல் போய்விட்டது. விளைவு வித்தியாசமான வழுக்கை. அதனாலேயே அவருக்கு கிழவர் போன்றதொரு தோற்றம் அமைந்து விட்டது. வெய்யிலில் இவர் நடந்து வந்தாரென்றால் தலைக்குப் பின் ஒரு ஒளிவட்டமே தெரியும்.

வீட்டில் ஒரு பாட்டிலில் வெள்ளை நிறத்தில் ஒரு திரவம் கப்போர்டில் இருந்தது. அதைத் திறந்து பார்த்தபோது கப்பு கப்போர்ட் முழுக்க பரவியது. கக்கூஸுக்கு ஊற்றுகிற பெனாயிலை எதற்கு இவன் இங்கு பத்திரப்படுத்தி
வைத்திருக்கிறான் என அவதானித்தபோதுதான் விளங்கியது, அது பெனாயிலல்ல ஹேராயில்தான் என்று. முடி கொட்டாமல் இருக்க வேண்டும் என்பதற்காக வீட்டிலேயே தயாரித்துக் கொடுத்த விசேச எண்ணெயாம் அது. தற்போது அதையும் மாற்றி ஏதோ புதிய வெளிநாட்டு எண்ணெயை வீடே நாற இரவில் தேய்த்து நடமாடுகிறான்.

அவருக்கு மண்டையில்தான் முடியில்லையே தவிர உடல் முழுவதும் கவுண்டமணியைவிட அதிகமாகவே முடியிருக்கிறது. இதனாலேயே அவருக்கு கரடிக்குட்டி என்றொரு செல்லப்பெயர் இருக்கிறது. போதும். இத்தோடு அறிமுகத்தை நிறுத்திக் கொள்வோம்.

நான் இரு மாதங்களுக்கு முன்புதான் தீனியன், சாணியன், வெட்டியான், தொடையன் ஆகியோர் தங்கியிருக்கும் இந்த விஜயநகர் வீட்டிற்கு வந்தேன். கடந்த ஒன்றரை வருடங்களாகத் தங்கியிருந்த வெட்டியான் போன ஞாயிற்றுக்கிழமை வீட்டை காலி செய்துவிட்டான். சோழிங்கநல்லூரில் காட்டேஜ் கணக்காக இருக்கும் ஒரு தனி அறையில் தனியாக தங்கப் போகிறான். இதற்கான பல காரணங்கள் கூறப்பட்டாலும் சனியாகப்பட்ட நான் ஒரு முக்கிய காரணியாக இருப்பது ஊர்ஜிதமாகியிருக்கிறது.

தனிமையிலே இனிமை காணுவதற்காக சோழிங்கநல்லூரில் "காட்டுக்குள்ளே ஏலேலோ காட்டேஜு.. அகிலகிலா.. தனி காட்டேஜு.. அகிலகிலா.. காட்டேஜுக்குள் ஏலேலோ கரடிக்குட்டி.. அகிலகிலா.. கரடிக்குட்டி"ன்னு தனியா மஜா செய்வதற்காக போய் விட்டான். ஆனால் சோழிங்கநல்லூரில் இருக்கும் வாட்ச்மேன்களெல்லாம் நள்ளிரவில் ஒரு கரடிமனிதன் இத்துப்போன ஸ்பெலெண்டரில் உலாவுவதாக பீதியில் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நாளை தினமலரில் "சோழிங்கநல்லூரில் உலாவும் கரடி
மனிதன்" என்றொரு செய்தி வெளிவரலாம்.

அதோடு தீனியன் சமீப காலமாக, முக்கியமாக கடந்த இரு தினங்களாக, கவிதைகள் என்னும் பெயரில் பஞ்ச் டயலாக்கள் எழுத முயற்சித்து வருகிறான். இது எங்களது ஆரோக்கியத்துக்கு ஆபத்து விளைவிக்கும் முயற்சியெனத் தெரிகிறது.

உதாரணமாக வெட்டியான் காலி செய்த போது அவன் பாடியது:
"விடுகதையா இந்த வாழ்க்கை.
வெட்டியான் தலையோ வெறும் வழுக்கை."

ஆண்டவா என நீங்கள் அலறுவது எவ்வித அதிநவீன தொழில்நுட்ப சாதனமும் இன்றி எனக்குக் கேட்கிறது. இருந்தாலும் என்ன செய்ய?
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.