<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d11181209\x26blogName\x3d%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://the4people.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://the4people.blogspot.com/\x26vt\x3d4395879655258469858', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

Friday, March 04, 2005

சாணியன் - அறிமுகம்

சாணி என்னும் பெயரைக் கேட்டதும் நீங்கள் கேவலமாகப் பார்க்கக்கூடாது. சாணிங்கறது ஒரு மருந்து மாதிரி. அது ஒரு சிறந்த கிருமிநாசினி. அதனாலதான் அந்தக் காலத்துல அதை இயற்கையா கிடைச்ச டெட்டாலா பயன்படுத்தி வீட்டை மெழுகி வெச்சிருந்தாங்க. சாணிங்கறது மாடும் போடும். யானையும் போடும். ஆனா சாணின்னு சொன்னா நம்ம நினைப்புக்கு வர்றது மாட்டுச் சாணம். அதாவது மாட்டுக் கழிவு. மாடுக்கும் நம்ம சாணியனுக்கும் ஒரு பூர்வ ஜென்ம பந்தம் இருக்கு. இதைக் கண்டுபிடிச்சு சொன்ன புண்ணியவான் நம்ம தீனியன்.

நாங்கள் பணிபுரியும் நிறுவனத்தில் ஒரு கேரள நாட்டு ஃபிகர்(ஃபிகர் எனக் குறிப்பிடுவதில் சாணியனுக்கு கடும் ஆட்சேபனை இருந்தாலும் வேறு வழியில்லை) இருக்கிறது. அவள் கிட்டத்தட்ட 6 அடி இருபாள். கேரள நாட்டுக்கேற்ற உடல் என்பதால் பார்க்க ரொம்ப gorgeous-ஆ தோற்றமளிப்பாள். Gorgeous என்றால் அவளுடைய கைகளின் அளவு எங்கள் தொடைகளின் அளவைவிடப் பெரியது. அவளை நாங்கள் செல்லமாக மாடு மாடு என விளிப்பது வழக்கம். நாங்கள் இவ்வாறு விளிப்பது அவளுக்கு தெரியாதது எங்கள் நல்ல காலம். அந்த மாடை நம்ம சாணியன், வாயில் ஏதோ இனம் புரியாத கரைசல் வழிய சைட் அடித்துக்கொண்டிருக்கும்போது வசமாக மாட்டிக் கொண்டுவிட்டான். அது மட்டுமல்லாமல் அவருக்கு மாடுகள் மேல் ராமராஜனையும் மிஞ்சும் அளவுக்கு பாசம் இருந்தது, நடுவழியில் நின்ற மாட்டை வண்டியை விட்டிறங்கி ஓரமாய் ஓட்டித் தள்ளியபின்பு, தெரிய வந்தது. இதைக் கண்டதிலிருந்து அவனை நடிகர் ராமராஜனின ரசிகனாக மாற்றி விட்டோம்.

பசுநேசன், பால்பையன், மாடசாமி,கௌபாய் என பல பெயர்களை யோசித்து வைத்தாலும் சாணியன் நன்றாக இருந்ததால் அதுவே அவருக்கு நிலைத்து விட்டது.

அதிலிருந்து சாணி என்பது அவருடைய குடும்பப் பொக்கிஷம். அவருடைய குடும்ப விழா மாட்டுப் பொங்கல். மாட்டுக் கொட்டகைதான் அவருடைய டுரிங் ஸ்பாட். அவருக்குப் பிடித்த பாடல் "மாட்டுக்கார வேலா உன் மாட்டை கொஞ்சம் பாத்துக்கடா" மற்றும் "சொன்னபடி கேளு மக்கர் பண்ணாதே". அவருக்கு பிடித்த உணவு பாலாடைக் கட்டி. (அதைக் கொடுப்பதோ ஒரு கேரள குட்டி.) அவருக்கு பிடித்த பானம் பால். பிடித்த பிரெட் 'மாட'ர்ன் பிரெட்.

மத்தபடிக்கு இவர் ஒரு சிறந்த இளிச்சவாயர்னுகூட சொல்லலாம். தப்பா எடுத்துக்காதீங்க. அப்படி ஒரு நகைச்சுவை ரசிகர். விஜயகாந்த், சரத்குமார் படம்னா இவருக்கு உசிரு. அவங்க பேரச் சொன்னாலே சிரிக்க ஆரம்பிச்சிடுவாரு. மத்தபடி இவர் டெக்கினிக்கலா பிஸ்தா.
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Wednesday, March 02, 2005

சனியன் - அறிமுகம்

என்னைப் பற்றி என் பதிவில் ஏற்கெனவே சொல்லி உங்களை தேவையான மட்டும் கடுப்பேற்றியிருப்பதால் மற்றவர்களை அறிமுகப்படுத்துகிறேன். மற்றவர்கள் சாணியன், தீனியன், மொக்கையன். எனது பாதுகாப்பு கருதி இவர்களுடைய உண்மையான பெயரை இப்போது வெளியிட இயலாத நிலையிலிருக்கிறேன்.
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

நாங்கள்

நாங்க நாலு பேர். எங்களுக்கு வேலைன்னா என்னன்னே தெரியாது. ஆபீஸ்ல எல்லாரும் எங்கள வெட்டிப் பசங்கன்னு சொல்லுவாங்க. கிட்டத்தட்ட ஒன்றரை வருசமா ஒண்ணாவே இருக்கோம் (இது காக்க காக்க பாணின்னு இன்னும் உணராதவங்க வீட்டில் தண்ணீர் குழாய் குளித்துக் கொண்டிருக்கும்போது உடையக் கடவதாக).


எங்களுடைய வேலை பெரும்பாலான நேரங்களில் சும்மா உட்கார்ந்திருப்பது. அதற்கு நாங்கள் பெறும் மாதச் சம்பளம் 16668 ரூபாய்கள். எங்கள் திறமைக்கு அது குறைச்சல்தான். கர்வத்தினால் சொல்லவில்லை. தன்னம்பிக்கையினால்தான் சொல்கிறேன்.

நாங்கள் அனைவரும் வெவ்வேறு திசைகளில் வெவ்வேறு ஊர்களில் இருந்து வந்திருந்தாலும் எங்களிடம் ஒரு பெரிய ஒற்றுமை இருந்தது. அது எங்களில் யாருக்கும் பெண் நண்பர்கள, அதாவது கேர்ள் ஃப்ரண்ட்ஸ், கிடையாது என்பதே. இது எங்களிடம் மனதில் ஒருவித பொறாமையையோ அனுதாபத்தையோ போட்டியையோ உண்டு பண்ணாமல் எங்களுடைய ஈகோவைத் தாண்டி பழக வைத்தது. இப்ப இருக்காங்களான்னு கேட்டா...ஹி ஹி....போகப் போக தெரிஞ்சுக்குவீங்க.
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

அறிவிப்பு

இங்கிதமோ விவஸ்தையோ சிறிதாவது இருப்பவர்கள் யாரும் இந்தப்பதிவை படிக்க வேண்டாமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஏனெனில் இந்த வலைப்பதிவு எங்களுடைய டைரிக்குறிப்புகள் போல. அதனால் அங்கங்கே பைத்தியக்காரத்தனமாக, கேனத்தனமாக, சின்னப்புள்ளத்தனமாக இருக்கும். இதற்காக மற்ற பதிவுகளில் தெளிவாக எல்லோரும் எழுதுகிறார்கள் என்று அர்த்தம் கிடையாது. போதும். இனிமேலும் இத்தொடரைப் படிப்பது உங்கள் தேய்ந்த மனநிலைக்கு மிகவும் ஆபத்தானது என்று எச்சரிக்கிறோம்.
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.