விருந்து
திங்கள் இரவு அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு வரும்போது இரவு மணி 8.15. வீட்டில் சாணியன், தீனியன், தொடையன் மற்றும் பொடுகு என எல்லோரும் எனக்காக காத்திருந்தார்கள். நான் வந்ததும் தஞ்சாவூர் மெஸ்ஸுக்கு போய் கொட்டிக்கலாம் என்ற முடிவில் இருந்தார்கள். நம் தீனியன் இப்போதுதான் சிங்கப்பூர் சென்றுவிட்டுத் திரும்பியிருந்தான். அதனால் ஒரு நல்ல ட்ரீட் வாங்கி விடலாமென்று காத்திருந்தோம்.
இந்த வெட்டியானை விட்டு விட்டு செல்ல எங்களுக்கு மனதில்லை. ஆனால் அவனுடன் உணவருந்த வேண்டுமானால் இரவு 1 மணிக்கு மேல்தான் முடியும். அதனால் தீனியனையும் மற்றவர்களையும் குழப்பி பெசந்த் நகர் பொன்னுசாமி ஓட்டலுக்கு கிளப்பி விட்டேன். கிளம்பும்போது மணி 8.30. நான் சொன்னதை நம்பி டீக்காக உடை உடுத்தி வந்திருந்ததால் தொடையனுக்கு பல்பு கொடுக்கலாம் என முடிவெடுத்திருந்தேன். வெளியில் சென்றவுடன் தீனியனே ஆட்டோவைக் கூப்பிட்டு விட்டதால் ஆனது ஆகட்டும் என கிளம்பி விட்டேன்.
சனியனாகப்பட்ட நான் மெனுகார்டைப் பார்த்துக் கொண்டே என்ன சூப் சொல்லலாம் என வினவியபோது , "வேணாம்டா. வயித்தை அதுவே அடைச்சுக்கும். இப்பவே பசி அவ்வளவா இல்லை. டைரக்டா சைட் டிஷ்ஷுக்கு போயிடு." என்றான் சாணியன். அடுத்து நாங்கள் கொடுத்த ஆர்டர்(இது வெட்டியானும் மொக்கையனும் வயிறெரிவதற்காக மட்டுமே): மீன் பொரியல், இறால் வறுவல், மீன் விரல்(ஃபிஷ் ஃபிங்கர்), முயல் 65, செட்டிநாடு சிக்கன் மசாலா, மட்டன் மசாலா, மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி, வெஜ் பிரைடு ரைஸ், ஆலு கோபி மசாலா, கோபி பிரை, கல் தோசை 2, ரோடி 2. இத்தனையையும் முடித்து விட்டு லஸ்ஸி 3, சாத்துக்குடி ஜூஸ் 1, லெமன் ஜூஸ் 1, பெப்ஸி 1, ஸ்ட்ராபெர்ரி ஐஸ்க்ரீம் 1 மற்றும் சாக்கோ ராக் 1 என வெளுத்தி கட்டியாயிற்று. அதன்பின் சோம்பு, ஆளுக்கொரு வாழைப்பழம், பீடா. அதன்பின் ஒரே ஒரு டம்ளர் தண்ணீர் குடித்து எங்கள் உண்ணும் விரதத்தை முடித்துக் கொண்டு கடைசியாக ஒரு காடை 65 சொல்லலாம் என்றிருந்ததை மறந்து கிளம்பினோம்.
தொடையனால் எழுந்து நடக்க முடியாத நிலையில் இருந்தானானாலும் சிறிது தூரம் நடந்தே சென்றோம். இரவு 11 மணிக்கு வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தோம். நல்ல ட்ரீட். தீனியனுக்கு நன்றிகள் பல உரித்தாகட்டும். மொக்கையன் இல்லாதது வருத்தமாக இருந்தாலும் ஒருவிதத்தில் சந்தோசமாகவே இருந்தது.
ஏன் கக்கூஸை இங்கு ரெஸ்ட் ரூம் எனச் சொல்லுகிறார்களோ. வீட்டிற்கு வந்ததும் தொடையன் ரெஸ்ட் ரூமிற்குச் சென்று ஒரு மணி நேரம் நன்றாக ரெஸ்ட் எடுத்துவிட்டு திரும்பினான். அடுத்த நாள் காலை அனைவரும் அரை மணித்துளிகள் ரெஸ்ட் எடுக்க முடிவெடுத்துவிட்டு தூங்கப் போனோம்.
காலை வெட்டியான் தீனியன் மேல் மோத முயற்சித்த போது தீனியன் "கடுகு மேல மலை மோதுனா என்ன ஆகறது!" என்றான். அதிலிருந்துதான் கடுகின் நண்பர் சிதம்பரத்துக்கு பொடுகென பெயர் வந்தது. "உங்க ஊரில் கடுகு இந்த சைசுல இருக்குமாடா?" என சாணியன் கேட்க நான் உடனே "உங்க ஊரில மலைக்கு மண்டையில எதுவும் இருக்காதா?" என வெட்டியானை பார்த்து கேட்டு வைத்தேன். அதிலிருந்து வெட்டியான் என்னை விரோத கண்ணோட்டத்திலேயே பார்த்து வருகிறான். என்ன நடக்குமோ!

Rate this post at
www.thamizmanam.com
Current rating is:
Click on the stars for voting pad.