சாணியன் - அறிமுகம்
சாணி என்னும் பெயரைக் கேட்டதும் நீங்கள் கேவலமாகப் பார்க்கக்கூடாது. சாணிங்கறது ஒரு மருந்து மாதிரி. அது ஒரு சிறந்த கிருமிநாசினி. அதனாலதான் அந்தக் காலத்துல அதை இயற்கையா கிடைச்ச டெட்டாலா பயன்படுத்தி வீட்டை மெழுகி வெச்சிருந்தாங்க. சாணிங்கறது மாடும் போடும். யானையும் போடும். ஆனா சாணின்னு சொன்னா நம்ம நினைப்புக்கு வர்றது மாட்டுச் சாணம். அதாவது மாட்டுக் கழிவு. மாடுக்கும் நம்ம சாணியனுக்கும் ஒரு பூர்வ ஜென்ம பந்தம் இருக்கு. இதைக் கண்டுபிடிச்சு சொன்ன புண்ணியவான் நம்ம தீனியன்.
நாங்கள் பணிபுரியும் நிறுவனத்தில் ஒரு கேரள நாட்டு ஃபிகர்(ஃபிகர் எனக் குறிப்பிடுவதில் சாணியனுக்கு கடும் ஆட்சேபனை இருந்தாலும் வேறு வழியில்லை) இருக்கிறது. அவள் கிட்டத்தட்ட 6 அடி இருபாள். கேரள நாட்டுக்கேற்ற உடல் என்பதால் பார்க்க ரொம்ப gorgeous-ஆ தோற்றமளிப்பாள். Gorgeous என்றால் அவளுடைய கைகளின் அளவு எங்கள் தொடைகளின் அளவைவிடப் பெரியது. அவளை நாங்கள் செல்லமாக மாடு மாடு என விளிப்பது வழக்கம். நாங்கள் இவ்வாறு விளிப்பது அவளுக்கு தெரியாதது எங்கள் நல்ல காலம். அந்த மாடை நம்ம சாணியன், வாயில் ஏதோ இனம் புரியாத கரைசல் வழிய சைட் அடித்துக்கொண்டிருக்கும்போது வசமாக மாட்டிக் கொண்டுவிட்டான். அது மட்டுமல்லாமல் அவருக்கு மாடுகள் மேல் ராமராஜனையும் மிஞ்சும் அளவுக்கு பாசம் இருந்தது, நடுவழியில் நின்ற மாட்டை வண்டியை விட்டிறங்கி ஓரமாய் ஓட்டித் தள்ளியபின்பு, தெரிய வந்தது. இதைக் கண்டதிலிருந்து அவனை நடிகர் ராமராஜனின ரசிகனாக மாற்றி விட்டோம்.
பசுநேசன், பால்பையன், மாடசாமி,கௌபாய் என பல பெயர்களை யோசித்து வைத்தாலும் சாணியன் நன்றாக இருந்ததால் அதுவே அவருக்கு நிலைத்து விட்டது.
அதிலிருந்து சாணி என்பது அவருடைய குடும்பப் பொக்கிஷம். அவருடைய குடும்ப விழா மாட்டுப் பொங்கல். மாட்டுக் கொட்டகைதான் அவருடைய டுரிங் ஸ்பாட். அவருக்குப் பிடித்த பாடல் "மாட்டுக்கார வேலா உன் மாட்டை கொஞ்சம் பாத்துக்கடா" மற்றும் "சொன்னபடி கேளு மக்கர் பண்ணாதே". அவருக்கு பிடித்த உணவு பாலாடைக் கட்டி. (அதைக் கொடுப்பதோ ஒரு கேரள குட்டி.) அவருக்கு பிடித்த பானம் பால். பிடித்த பிரெட் 'மாட'ர்ன் பிரெட்.
மத்தபடிக்கு இவர் ஒரு சிறந்த இளிச்சவாயர்னுகூட சொல்லலாம். தப்பா எடுத்துக்காதீங்க. அப்படி ஒரு நகைச்சுவை ரசிகர். விஜயகாந்த், சரத்குமார் படம்னா இவருக்கு உசிரு. அவங்க பேரச் சொன்னாலே சிரிக்க ஆரம்பிச்சிடுவாரு. மத்தபடி இவர் டெக்கினிக்கலா பிஸ்தா.

Rate this post at
www.thamizmanam.com
Current rating is:
Click on the stars for voting pad.
8 Comments
"சாணி என்னும் பெயரைக் கேட்டதும் நீங்கள் கேவலமாகப் பார்க்கக்கூடாது. சாணிங்கறது ஒரு மருந்து மாதிரி. அது ஒரு சிறந்த கிருமிநாசினி. அதனாலதான் அந்தக் காலத்துல அதை இயற்கையா கிடைச்ச டெட்டாலா பயன்படுத்தி வீட்டை மெழுகி வெச்சிருந்தாங்க. சாணிங்கறது மாடும் போடும். யானையும் போடும்"
எந்த ஊரில் ஐயா யானை சாணி போடும்? அதற்கு பெயர்-இலத்தி,
அதுவும் சாணி மாதிரி ஒரு சிறந்த கிருமிநாசினி,ஒரு மருந்து, சும்மா சொல்லவில்லை, நன்றாக காய்ந்த இலத்தியினை உங்கள் ஊர் கூவம் ஆற்றுக்கரையில் எரிந்து புகையும்படி விட்டீர்களானால், அப்புறம் பாருங்களேன், சிங்காரச் சென்னையில் ஒரு கொசுவைக்கூட காணமாட்டீர்கள்.
கூடவே உங்கள் கூட்டத்தில் ஒருவரை இலத்தியன் என்று மாற்றிக் கொள்ளுங்கள்.
இதற்கெல்லாம் மருத்துவர் ஐயா ஆட்சேபிக்கமாட்டார் போங்க.
-குமரேஸ்-
தகவலுக்கு நன்றி. இப்படித்தான் பல வார்த்தைகள் தெரியாமல் போய்விட்டது.
அடடா. இப்படி இலத்தியின்மீது பாசமுடைய ஒருவர் இருப்பது தெரியாமல் போய்விட்டதே. குமரேஸ் உங்களுக்கே இலத்தியன் என பெயர் வைத்துவிட்டோம். சந்தோசம்தானே.
ஆமாம். அதென்ன உங்கள் ஊர் கூவம். நீங்கலும் சென்னைதானே?
"தகவலுக்கு நன்றி. இப்படித்தான் பல வார்த்தைகள் தெரியாமல் போய்விட்டது"
உங்களுக்கு மட்டுமல்ல இன்னமும் பலபேருக்கும், அதுவும் குறிப்பாக தமிழில்தான் சினிமா தலைப்பு இருக்க வேண்டும் என்று கூச்சல் போடும் பலருக்கும் இது பொருந்தும்.
அது சரி,
"உங்கள் ஊர் கூவம் ஆற்றுக்கரையில்........"
என்றும்
"உங்கள் கூட்டத்தில் ஒருவரை இலத்தியன் என்று..................."
என்றும்தானே நான் எழுதினேன்.
"உங்கள்" என்பதன் தமிழ் அர்த்தம் தெரியாதா என்ன?
--குமரேஸ்--
Naan kooda yetho Sania-voda fan-nnu nenachen chey...
பாவம்பா!! பாவம் :-)
குமரேஸ்,
'உங்கள்' என்பதற்கு அர்த்தம் தெரியும். ஆனா நான் சொன்னதுக்குதான் உங்களுக்கு அர்த்தம் தெரியாம போயிடுச்சு. விளக்கமாவே சொல்றேன். உங்க Blogger Profile-ல நீங்க சென்னைன்னு போட்டிருந்தது. அதனாலதான் உங்க ஊர் கூவம்னு சொன்னதைக் கேட்டேன். உங்க பூர்வீகம் சென்னை இல்லைன்னா எங்க பூர்வீகமும் சென்னை இல்லை. உங்க பூர்வீகம் சென்னைன்னா எங்க பூர்வீகமும் சென்னை இல்லை. எப்படிப் பாத்தாலும் நீங்க சொன்னது தப்பு. இப்ப சொல்லுங்க நீங்க எந்த அர்த்தத்துல 'உங்க ஊர் கூவம்'னு சொன்னீங்க.
அடுத்தது எங்க கூட்டத்துல இருக்கறவருக்கு பேர் வெக்கறதுக்கு நீங்க எங்க கூட்டத்தைச் சேர்ந்தவராத்தான் இருக்கணும். அப்படீன்னா அந்தப் பேர உங்களுக்கே வெச்சிடுறோம்னு சொன்னேன். 'இல்ல. நான் உங்க கூட்டத்தைச் சேர்ந்தவன் கிடையாது'ன்னு சொன்னீங்கன்னாலும் இந்த பேர் உங்களைத்தான் நியாபகப்படுத்தும். எப்படி இருந்தாலும் எங்களைப் பொருத்த வரைக்கும் இலத்தியன்னு சொன்னா குமரேஸ்தான். நீங்களும் கொஞ்சம் நக்கல் விட்டீங்க. நானும் விட்டுட்டேன். அம்புட்டுத்தேன். இதுக்கு மேல இங்க வேணாம். வேற ஏதானும் சொல்லணும்னா தனியா மடல் அனுப்புங்க.
Cipher,
அவரு சானியாவோட ரசிகர்தான். ஆனா டென்னிஸ்காக கிடையாது.
கங்கா,
யாருங்க பாவம்?
Hi
Unga bathil ellam susper
Post a Comment
<< Home