<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d11181209\x26blogName\x3d%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://the4people.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://the4people.blogspot.com/\x26vt\x3d4395879655258469858', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

Tuesday, March 08, 2005

மொக்கையன் - அறிமுகம்

இவரு ஒரு மொக்கை திலகம். செல்போன் என்ற சாதனத்தையே இவரு பயன்படுத்தறத பாத்தா கண்டுபிடிச்சவன் 100000 முறை தற்கொலை பண்ணீயிருப்பான். என்னைக்குத்தான் அனத செல்போனே தாங்க முடியாம வெடிச்சு சிதறப் போகுதுன்னு நாங்க பயந்து நின்னப்ப இவனை அமெரிக்கா போகச்சொல்லி உத்தரவு வந்திருச்சு.

இவரு பாடுவாரு. ஆடுவாரு. குரங்குக்குப் போட்டியா குட்டிக்கரணம்கூட போடுவாரு. ரொம்ப ரொம்ப சுறுசுறுப்பா இருப்பாரு. எங்க நாலு பேர்ல பொண்ணுங்ககிட்ட அதிகமா பேசினது இவர் மட்டும்தான். நிறைய நேரம் போன்ல பேசிக்கிட்டிருப்பான். யார்கிடன்னு கேட்டா ஜூனியர்னு சொல்லுவான். நண்பன்னு சொல்லுவான். ஆனா பொண்ணு குரல் கேக்கும். கேட்டாக்க பிரண்டீன்னு சொல்லுவாரு. ஆனா உண்மையா என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்கறதுக்குள்ள அவரு அமெரிக்கா பறந்துட்டாரு.

1 மணி நேரத்துக்குள்ள போன்ல பேசி முடிச்சா அவருக்கு கவுரவம் குறைஞ்சு போயிரும். ரெண்டு செல்போன், ஒரு லேண்ட்லைன் அப்ப்டின்னு மூணு போன்ல ஒரே நேரத்துல மொக்கையைப் போடுறது எங்களுக்கு தெரிஞ்சு இவருக்கு மட்டுமே கைவந்த சாரி வாய்வந்த கலை.

இவர் ஒரே சமயத்துல ஏகப்பட்ட ப்ராஜெக்ட் ஆரம்பிப்பார். ஆனா ஒண்ணுலயும் உருப்படியா பங்கெடுத்ததா பூதக்கண்ணாடி வெச்சு தேடிப்பாத்தாகூட தெரியாது.
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Monday, March 07, 2005

தீனியன் - அறிமுகம்

பெயரைக் கண்டவுடனேயே இவரைப் பற்றி புரிந்திருக்கும். இவர் தீனி சாப்பிடுவதற்காகவே உடம்பை வளக்கறவர். தீனின்னா சாப்பாடு, நொறுக்கு வகைகள் எல்லாமேதான். எந்த ஹோட்டல் போனாலும் இவரோட பில்தான் அதிகமா இருக்கும். சங்கீதாஸ் ஹோட்டலுக்கு போய் 40 ரூபாய்க்கு ஒரே ஒரு தோசை சாப்பிட்டது இவரோட சமீபத்திய சாதனை. இவரை சாப்பாட்டு ராமன்னு சொல்ரதவிட சாப்பாட்டு பீமன்னு சொல்லலாம்.

இவ்வளவு சாப்பிட்டாலும் தொப்பை 5 மாசம் முழுகாம இருக்க மாதிரியே இருக்கும். அதை எப்படித்தான் maintain செய்யறார்னு தனியா ஒரு ஆராய்ச்சி நடத்த சாணியன் தலைமையில் கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் நிதி ஒதுக்கியிருப்பதாக தெரிகிறது.

இவரோட பஞ்ச் டயலாக்: "இட்ஸ் ஆல் இன் த கேம். இவை அனைத்தும் ஆட்டத்தில் உள்ளது. யே சப் கேல் மே ஹை." நல்ல காலம் அவருக்கு இந்த மூணு மொழிதான் தெரியும்கிறதால நாங்க தப்பிச்சோம்.

இவரு சாப்பிடறப்போ சொல்ற பஞ்ச் டயலாக்: "தீனி தின்னாத்தான் சாணி வரும். சாணி ஒழுங்கா வந்தாத்தான் சரீரம் வளரும்." கூடவே நாங்க சொல்ற டயலாக்:"இப்படியே சரீரம் வளந்தா சங்குதான் ஊதணும்."

இவர் சொந்த ஊரு திருச்சிக்குப் பக்கத்துல இருக்க குக்கிராமமான கருமண்டபம். ஆனா இவர் திருச்சி மேல வெச்சிருக்க பாசத்துக்கு இன்னும் கொஞ்ச நாள்ல திருச்சியை தலைநகரமா மாத்தறதுக்கு கோட்டைக்கு முன்னால உண்ணும்விரதம் இருக்கப் போறதா சொல்றாரு.

ஆன்லைன் பேங்கை பாத்திருப்பீங்க. ஆஃப்லைன் பேங்கைப் பாத்திருப்பீங்க. ஆனா ஒரு ஆசாமியே பேங்கா இருக்கறத பாக்கணும்னா இவரை பாருங்க. எங்க எல்லாருக்கும் வட்டியே இல்லாம long term, short term loans கொடுக்கும் லோன் லோகநாதன் இவர்தான். இவர் ஒரு பிரைவேட் பேங்க். என்ன பாவம் பையன் கொஞ்சம் நல்ல பையன்.

கிரிக்கெட்னா இவருக்கு உசிரு. திராவிட்னா ரொம்ப ரொம்ப உசிரு. ஆனா இன்னும் சொக்கனோட திராவிட் புக் வாங்காம இருக்கறது ஏன்னுதான் தெரியல.
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.